வெற்றிகளுக்கான எங்கள் திருவிழாக்களில், காணமல்
போயுள்ள ஆரோ சிலரின் "நம்பிக்கைகள்" பற்றி சிந்திக்க தோண்றுகிறது.
எதிர்பார்ப்புகளும், போட்டிகளும் ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்துள்ள பாதையில்,
பாரிய குழிகளாய் நிறைந்துள்ளன நம்பிக்கையினங்கள். தவறி வீழ்ந்தோர் பற்றி எந்த கரிசனையும்
இல்லாது, "உலக வழமைகள்" வழக்கம் போலவே, ஓட வந்தோரை மீண்டும் மீண்டும்
தனது திசை நோக்கி உந்தி தள்ளியபடி உள்ளது. சிறுவர் பராயத்தில் திணிக்கப்பட்ட போட்டிகளால், திசை இழந்த பறவைகளாக வாழும் நண்பர்கள் ஏராளம். இவர்களின் இன்றைய வாழ்வே, அடுத்த தலைமுறைகளை வழிநடத்துவதற்கான செய்தி. இருந்தும், சந்ததிகள் கடந்து, கையளிக்கப்பட்ட அதே அச்சில், இன்னும் எமக்கான சிலைகளை தயாரிக்கும் முயற்சியில் நாம். எங்கள் கைகளில் அவர்களில் ஆரோ சிலரின் நம்பிக்கைகளும் உள்ளதாக நம்புவோம்!