01 ஜனவரி 2011

ஆதலினால்..வாழ்தல் வேண்டும்!


எதிர் மறை அனுபவங்களுடன் இன்னும் ஒருவருடம் 2011. ஒவொரு பிறப்பிலும் ஏரளாமான நம்பிக்கைகளும், நேர் சிந்தனைகளுமாக 'இயங்குதல்' புதுப்பிக்கப்படுகிறது.இருந்தும் எமது கதை சொல்லுதலில் திருப்பதி அடையாது முருங்கை மரத்தின் மீது மீண்டும் மீண்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது எம்மை சுற்றியுள்ள வேதாளங்கள். எமது கதையாடல்களை சபிப்பதா, வேதாளங்களை சபிப்பதா என்ற குழப்பத்தில் சாமானியர்கள். இருந்தும், இவை எவற்றையுமே சாட்டை செய்யாது பூந்திரிகளுடன் ஒளிரும் மழலைகளும், நிறங்களை மாற்றி நிலங்களை அழகுபடுத்தும் இயற்கையும் தங்களுக்குரிய அன்றைய நாட்களை கொண்டடிக்கொண்டிருக்கின்றன. அனுபவங்களுக்கு அப்பால் நின்று அன்றைய நாட்களை கொண்டாட நாம் மழலை ஆகவும் இயற்கையாகவும் மாறவேண்டியுள்ளது. இருந்தும் அறுந்து போயுள்ள தந்திகளுடன் உள்ள தம்புராக்கள் எப்படி இன்றைய நாளுக்குரிய ராகத்தை இசைக்கமுடியும் என்பது எதனிலும் கொடிய கேள்வியாக உள்ளது. ஆதலால், உங்கள் இசை உங்களுடன் சேர்த்து அவர்களுக்கும் உரிய ராகங்களையும் மீட்டுவதாக அமையட்டும்.

2 கருத்துகள்:

  1. ஆதாலினால் அப்படியே வாழ்வோம்...
    இந்த வருடம் இனிமையானதாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு