29 மே 2011

எழுத்துக்கள்....


இப்போதிருக்கும்
எந்தக் கண்ணும்
காணாத காலத்திலேயே
நாங்கள்
கர்ப்பமாகிவிட்டோம்

ஆனாலும்…
இன்னும்
பிறந்துகொண்டேதான்
இருக்கிறோம்



எங்களுக்கு
உயிருண்டு – ஏன்
மெய்யுமுண்டே
உயிர், மெய் வந்தால்தானே
உண்மையான நிறைவு;
அதுவும் உண்டே

இலக்கியம்தான்; எங்கள்
இலக்குகள்.
அங்கேதான் - நாம்
எழுதுகின்றோம்
ஏன்
சிலவேளைகளில்
ஆதற்குள்ளேயே
அழுகின்றோம்

நாங்கள்….
எழுவதும் விழுவதும் - அந்த
எழுத்தாளனைப் பொறுத்தது
காகிதக் கப்பல் கொண்டு
எங்களை
கரைசேர்ப்பவன் அவனல்லவா!

நாங்கள்- இன்னும்
காலமாகாது இருப்பதும் கூட
அவனால்தான்!

கவிதை…
எம் தரணி தாஜ்மகால்
பட்ட பொழுதுக்கு
வட்ட நிலா எப்படியோ
அப்படிதத்தான் - எமக்கு
கவிதை

மரபுக் கவிதையில்
எங்கள்…
இதய அடிப்புக் கேட்கும் - அதில்
கற்றவருக்குத்தான்
எங்கள்…
கருத்துக்கள் தெரியும்
மற்றவருக்கு – வெறும்
"லப் டப்" மட்டுமே

குழந்தையின்
கெஞ்சுதலைப் போல
ஒப்பனையில்லாத
புன்னகையை – நாங்கள்
புதுக்கவிதையில் தான்
புரிகின்றோம்.
அப்பட்டமான
ஆனந்தத்தையும் - ஏன்
புழுக்கத்தையும் கூட
அதில்தான் பூட்டுவோம்!

எப்படியாயினும்
நாங்கள்… எழுத்துக்கள் - ஆமாம்
இறந்த காலத்தை; எதிர்காலத்துக்கு
காவிச்செல்லும்
எறும்புகள் நாங்கள்!!
(பள்ளிக்கால கவிதைகள் 97)

2 கருத்துகள்:

  1. நாங்கள்… எழுத்துக்கள் - ஆமாம்
    இறந்த காலத்தை; எதிர்காலத்துக்கு
    காவிச்செல்லும்
    எறும்புகள் நாங்கள்!!//

    எழுத்தையே கவிதையாக்கி
    எழுந்தது உன் கவிதை
    உழுதன எழுத்துகள்
    உள்ள சுமைகளை தெறித்தன
    (க)விதைகள்பற்றி
    கருத்துகள் பகிர்ந்தன.
    எதிலுமே நாட்டம்
    எம் மால்மருகனுக்கு
    வாழி !வாழி!

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள்..எதையுமே கவிதையில் தான் கதைப்பீர்களோ?
    :)

    பதிலளிநீக்கு