![]() | |
|
இது, நண்பனின் வலி நிறைந்தவோர் திருப்பம்பற்றி அறிந்துகொண்ட நாள். விடைகளே அற்ற கேள்விகளை, வாழ்க்கை தன் பாதையின் இடையில் பெரிய தடைகளாய்ப் போட்டு வைத்துள்ளது. எந்தப் பயணமும் இதுவரை நேர்கோட்டில் நிகழ்ந்ததில்லை என்றபோதும், எதிர்பார்க்க முடியாத வளைவுகளில் வாழ்க்கையின் மறு பகுதியை தரிசிக்கும் போது மனது கனக்கிறது.
திருப்பங்களின் மறுகோடியில் விருப்பங்களேயற்ற வலிகள் காத்திருந்தாலும், திசைகளைத் தொலைக்காத அவர்களின் பயணத்திற்காய் பிரார்த்திக்கத் தோன்றுகிறது!!