22 டிசம்பர் 2010

எங்கள் நினைவுகளின் தோட்டத்தில் நீங்கள்.



வானில் மிதக்கும் மேகங்களாய் மனதுள் அலைகிறது நினைவுகள், எப்போதோ பழகிய ஞாபகங்களின் ஊற்றில் இருந்து, மனதுள் - இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது நினைவுகள் என்ற நதி. எங்கள் தளவாடிகளை விட்டு நீக்கள் நீங்கிச்சென்றாலும், உங்கள் விம்பங்கள் மட்டும் என்றும் தெறித்த வண்ணமே உள்ளது எங்கள் சுவர்களில் . கண்ணுக்கு தெரியாமல் மனதில் ஒட்டிப்போயுள்ள கடவுளும், கலாச்சாரமும் போல, நீங்கள் என்ற நிஜம் மறைந்து நின்றாலும், உங்கள் ஞாபகங்களின் பாதிப்புக்கள் அதே உஷ்ணத்திலேயே உள்ளது. பிரிவுகள் எதனிலும் கொடுமையானவை. பிரிவுகளின் கனதி, நினைவுகளின் மீட்டலில் தான் உணரமுடிகிறது. இருந்தும் உங்களை பற்றிய ஞாபகங்களின் தொகுப்பு இன்றும் இந்த பிரபஞ்சத்தின் பாகமாய் உள்ளதாகவே உணர்கிறோம். பேசிய மொழியும், உங்கள் வார்த்தைகளின் ஒலியும், இன்றும் இதே காற்றில் தான் கலந்துள்ளது. உங்களுடன் பேச ஊடகங்கள் இல்லா விடினும், இவற்றின் மூலமான பரிமாற்றங்கள், இனம்புரியாத தொடர்பில் உங்களையும் எங்களையும் இணைத்திருக்கும் என நம்புவோமாக

-தூரத்தால், உறவு பிரிந்த துயரத்தில் இருப்போர்க்கு, இது சமர்ப்பணம்-

1 கருத்து:

  1. நினைவுகளின் தோட்டத்தில் ஆஹா..அப்பப்போ கனியுண்டதும், நெருஞ்சிமுட்கள் பாதங்களை பதம் பார்த்ததும், வண்ணத்துப்பூச்சிகளை கண்டு அனந்தப்பட்டதும், பாம்புகளை கண்டு பயம் கொண்டதும்... எத்தனை நினைவுகள்..
    ஆம் நிற்சயமாக அவை நினைவுகளின் தோட்டங்கள்தான்.

    பதிலளிநீக்கு