25 டிசம்பர் 2010
காத்திருக்கும் காகம்
இது எலெக்சன் காலம்,
இந்த கல்லை
எந்த பாத்திரத்தில் போடுவது?
இதை போட்டால் ..
தண்ணீர் அல்ல,
தேனே வரும் என்கின்றனர்,
பால் வரும் பாக்கியமும் உள்ளதாம்!
பாகே வரும் என்றால் பாருங்களேன்!!
உங்களை போல அல்ல; நண்பர்களே,
நரியிடம் வடை இழந்த நான்
இப்போதெல்லாம்...
வார்த்தைகளை விட
வாழ்கையை நம்பத்தொடங்கி விட்டேன்,
தாகத்தை விட -எனக்கு
தண்ணீரே முக்கியமாக உள்ளது!
...................................
Photo: Eluvathivu Jetty 18.02.2010
கடவுள்
![]() |
Photo I T.Mayuran I Mutur,Trinco I 2008 Feb |
.........................
ஒளியை விழுங்கிய இருட்டு,
உயிர் தந்த முகிலை
மறைத்து கொட்டும் கொடு மழை,
பாறைகளை புரட்டிவிட்டு
கை காட்டி அகன்ற அலை,
பிணம் உண்ட செருக்கில்
உறுமி படுத்துள்ள கடல்,
மரங்களை- புற்களின் அடியில்
மண்டியிட வைத்த காற்று,
மலைகளை புரட்டுவதாய்
மிரட்டி பாயும் நதி,
இத்தனைக்கு பின்னும்..
எதுவும் நடக்காததாய் சிரிக்கும்
இவள்- கடவுள்!
அவிதி
...............
நியூட்டா..
சமனும்,
எதிருமான ..
மறுதாக்கம் எங்கே?
..............................
கோபத்தில் அடிக்கும்
"அம்மா"
அவளையே கட்டிக்கொண்டு..
அழுகிறது
குழந்தை!
..............................
நியூட்டா..
சமனும்,
எதிருமான ..
மறுதாக்கம் எங்கே?
..............................
கோபத்தில் அடிக்கும்
"அம்மா"
அவளையே கட்டிக்கொண்டு..
அழுகிறது
குழந்தை!
..............................
22 டிசம்பர் 2010
உலகம(மா)யமாதல்
என்னை நினைவிருக்கிறதா?
நீங்கள்...
சுமைப்படும் போதும்,
சுகப்படும் போதும் -என்னில்
பகிர்ந்து கொட்டிய
எண்ணங்கள் பற்றி
எனக்குத்தான் தெரியும்!
உங்கள் ஆதங்கங்களை -என்
வாயில் திணித்துவிட்டு செல்வீர்கள்,
செரிமானம் ஆகாத வலியில் - நான்
திறக்க வரும்
தபால் காரனுக்காக
தவமிருந்த காலங்கள் - உங்கள்
பிரசவ நாட்களை விட
பெறுமதியானவை!
வெளிநாட்டில்,
உறவுகளை உதிர்த்து விட்டு...
என்னிடம் வந்து,
மடல்களை அல்ல - மனங்களை அல்லவா
நிரப்பி சென்றனர்!
தம்பள பூசசியாய் -என்னை
தடவிச்செல்லும்
காதலர்களை பற்றி
என்ன சொல்ல?
அடிக்கடி இடம் பெயரும்
ஈழ தமிழர் போல் - அவர்கள்
இதயம் பெயர்ந்த கதைகளும்
எனக்கு தெரியும்!
உங்கள் உணர்வுகளை காவ
ஒற்றை காலில்
தவமிருந்த எனக்கு - இப்போ
இணையம் என்ற இயமன்
ஈமெயிலிலும், பேஸ் புக் இலும்
பாசக் கயிறு எறியும்
பாவம் பற்றி - எங்கு
பேச?
விரிந்த வலைக்குள்
விழுந்து விழுந்து
"அளவுங்கள்" -ஒருநாள்
உங்கள் அன் கொன்ஸெஸ்,
சப் கொன்ஸெஸ், எல்லாம்
தவணை முறையில்
சந்தைப்படும் போது
என்னை நினைத்து
அழுவுங்கள்!!
--ஆற்றாமையால் அழக் கண்ட
மண்டைதீவு தபால் பெட்டி --
நீங்கள்...
சுமைப்படும் போதும்,
சுகப்படும் போதும் -என்னில்
பகிர்ந்து கொட்டிய
எண்ணங்கள் பற்றி
எனக்குத்தான் தெரியும்!
உங்கள் ஆதங்கங்களை -என்
வாயில் திணித்துவிட்டு செல்வீர்கள்,
செரிமானம் ஆகாத வலியில் - நான்
திறக்க வரும்
தபால் காரனுக்காக
தவமிருந்த காலங்கள் - உங்கள்
பிரசவ நாட்களை விட
பெறுமதியானவை!
வெளிநாட்டில்,
உறவுகளை உதிர்த்து விட்டு...
என்னிடம் வந்து,
மடல்களை அல்ல - மனங்களை அல்லவா
நிரப்பி சென்றனர்!
தம்பள பூசசியாய் -என்னை
தடவிச்செல்லும்
காதலர்களை பற்றி
என்ன சொல்ல?
அடிக்கடி இடம் பெயரும்
ஈழ தமிழர் போல் - அவர்கள்
இதயம் பெயர்ந்த கதைகளும்
எனக்கு தெரியும்!
உங்கள் உணர்வுகளை காவ
ஒற்றை காலில்
தவமிருந்த எனக்கு - இப்போ
இணையம் என்ற இயமன்
ஈமெயிலிலும், பேஸ் புக் இலும்
பாசக் கயிறு எறியும்
பாவம் பற்றி - எங்கு
பேச?
விரிந்த வலைக்குள்
விழுந்து விழுந்து
"அளவுங்கள்" -ஒருநாள்
உங்கள் அன் கொன்ஸெஸ்,
சப் கொன்ஸெஸ், எல்லாம்
தவணை முறையில்
சந்தைப்படும் போது
என்னை நினைத்து
அழுவுங்கள்!!
--ஆற்றாமையால் அழக் கண்ட
மண்டைதீவு தபால் பெட்டி --
ஜன-நாயகம்
![]() |
Photo I T.Mayuran I Chennai I 2006 April |
வண்ண வண்ணமாய்
நிறைந்துகொண்டிருக்கிறது சுவர்கள்!
எங்கள்,
வயிறுகள் மட்டும்.........
சுவர்களில் இருந்து
பார்த்துக்கொண்டிருங்கள்,
சுடலையாகிறது
எங்கள் வாழ்வு!
வண்ணங்கள் கொடுத்தனுப்பும்
நீங்கள்,
எங்கள்
கிண்ணங்களை மறந்ததேன்?
ஜனங்கள் அல்ல,
"நாயகர்களே"
ஆள்வதாக,
ஆகியிருக்கிறது - எங்களின்
ஜனநாயகம்!
சாம்பல் எழுதும் சரித்திரம்
![]() |
Photo I T.Mayuran I Allaippitty I 2010 |
கடல் இல்லாமல்
அலை!
தலை இல்லாமல்
தவம்!
வரங்களுக்காக அல்ல - உங்கள்
சிரங்களுக்காக!!
தறித்துவிட்டு சென்றவனே
இது கேள்..
ஒளித்தொகுக்க -என்னில்
பச்சையம் இல்லை -இருந்தும்
வீச்செறிந்து விரையும் விதைகளுக்கு -நான்
கர்ப்பப்பை!
இங்கே - நீ
பறித்தது
கொப்புகளை அல்ல- உன்
வரும்காலத்தின் வேர்களை!
நான் வளர்விப்பது
செடிகள் அல்ல, சந்ததிகள்!
உறுப்பில்லை என்ற கவலையில்
உலகு வெறுத்திருக்கும் உறவுகளே - இங்கே
உயிர் இல்லாமல் தொடரும்
பிரசவம் பார்த்திர்களா?
இது..
அழித்தவனை
காக்கும் கடும் தவம்,
எரித்த நெருப்பையே,
குளிர்விக்கும் பிரயத்தனம்!
முடிந்த வரலாற்றுக்கு -மீண்டும்
எழுதும் முன்னுரை!!
எங்கள் நினைவுகளின் தோட்டத்தில் நீங்கள்.
வானில் மிதக்கும் மேகங்களாய் மனதுள் அலைகிறது நினைவுகள், எப்போதோ பழகிய ஞாபகங்களின் ஊற்றில் இருந்து, மனதுள் - இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது நினைவுகள் என்ற நதி. எங்கள் தளவாடிகளை விட்டு நீக்கள் நீங்கிச்சென்றாலும், உங்கள் விம்பங்கள் மட்டும் என்றும் தெறித்த வண்ணமே உள்ளது எங்கள் சுவர்களில் . கண்ணுக்கு தெரியாமல் மனதில் ஒட்டிப்போயுள்ள கடவுளும், கலாச்சாரமும் போல, நீங்கள் என்ற நிஜம் மறைந்து நின்றாலும், உங்கள் ஞாபகங்களின் பாதிப்புக்கள் அதே உஷ்ணத்திலேயே உள்ளது. பிரிவுகள் எதனிலும் கொடுமையானவை. பிரிவுகளின் கனதி, நினைவுகளின் மீட்டலில் தான் உணரமுடிகிறது. இருந்தும் உங்களை பற்றிய ஞாபகங்களின் தொகுப்பு இன்றும் இந்த பிரபஞ்சத்தின் பாகமாய் உள்ளதாகவே உணர்கிறோம். பேசிய மொழியும், உங்கள் வார்த்தைகளின் ஒலியும், இன்றும் இதே காற்றில் தான் கலந்துள்ளது. உங்களுடன் பேச ஊடகங்கள் இல்லா விடினும், இவற்றின் மூலமான பரிமாற்றங்கள், இனம்புரியாத தொடர்பில் உங்களையும் எங்களையும் இணைத்திருக்கும் என நம்புவோமாக
-தூரத்தால், உறவு பிரிந்த துயரத்தில் இருப்போர்க்கு, இது சமர்ப்பணம்-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)